நரம்புமண்டலப் பாதிப்பு அறிகுறியையும் காட்டும் கொரோனா..!!

கொவிட்-19 எனப்படும் கொரோனா தொற்று ஏற்பட்டதை சில அறிகுறிகள் மூலம் அறிந்துகொள்ள முடியும் என ஏற்கணவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது காய்ச்சல், தலைவலி, களைப்பு, தொண்டை வரட்சி, இருமல் மற்றும் சுவாசச் சிக்கல் என்பவற்றின் ஊடாக அறிந்துகொள்ள முடியும்.

எனினும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட ஆய்வில் மேலும் சில அறிகுறிகள் அல்லது பாதிப்புக்கள் தென்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி இருதயத்தில் பாதிப்பு ஏற்படுதல், இரத்தம் உறைவதில் பாதிப்பு ஏற்படுதல் உட்பட நரம்பு மண்டலத்திலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

முன்னர் சுவாசக் கலங்களை மாத்திரமே கொவிட்-19 தாக்கும் என கருதப்பட்டபோதிலும் ஏனைய கலங்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.