லண்டனில் லாக் டவுனால் ஏற்பட்ட மன சிதைவினால் 40 வயது தமிழ் தந்தை ஒருவர் பிள்ளைகளை தாக்கியதுடன் தன்னையும் தாக்கிய துயர சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
மனைவியின் சகோதரர் சமீபத்தில் கொரோனா வந்து இறந்த நிலையில் கணவனை வேலைக்கு செல்லவேண்டாம் என்று கூறி, மனைவி தடுத்துள்ளார்.
இதன் காரணமாக மனச்சிதைவால் பாதிக்கப்பட்ட குறித்த நபர் வெறித்தனமாக மாறி தனது 2 பிள்ளைகளையும் கத்தியால் குத்திவிட்டு, தன்னையும் கத்தியால் காயப்படுத்திக் கொண்டுள்ளார் . இது லாக் டவுனால் ஏற்பட்ட மன சிதைவின் உச்சக் கட்டம் என கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் லண்டன் இல்பேட்டில் உள்ள அல்பரோ வீதியில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 2 மாதமாக நிலவி வரும் லாக் டவுன் காரணமாக வேலைக்கு செல்லாமல், வீட்டில் பணக் கஷ்டத்தில் கணவர் இருந்துள்ளார். இந்த நிலையில் மனைவி அடிக்கடி கணவரை வேலைக்கு செல்ல வேண்டாம் எனக் கூறியதால், தம்பதிகளுக்கு இடையில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
நேற்றியதினம் இந்த தர்க்கம் , பெரும் சண்டையாக வெடித்ததில் கணவன் பிள்ளைகளை கத்தியால் குத்தி. தன்னையும் மாய்த்துக் கொள்ள முனைந்துள்ளார்.
சம்பவத்தில் இரு பிள்ளைகளும் உயிரிழந்த நிலையில் தற்பொழுது கணவனும் உயிருக்கு போராடிக் கொண்டு வைத்தியசாலையில் இருக்கிறார் .
இந்த சம்பவம் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
லாக் டவுன் நிலையில் பல விடையங்களை சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். பொறுமையாக இருக்க கற்றுக் கொள்வது நல்லது. வீணான சண்டைகள் பெரும் இழப்பில் கொண்டு போய் சேர்க்கும்.
மேலும் இன்றைய காலகட்டத்தில் அரசாங்கம் எப்படி பண உதவிகளை செய்கிறது? அதனை எப்படி பெற்றுக் கொள்ளலாம் என்பது தொடர்பாக ஆராய்ந்து அதற்கான உதவியை நாடவேண்டுமே தவிர இவ்வாறான வன்முறைகளில் ஈடுபடவேண்டாம் என ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.