கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் 26 வயதான காசி, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் தனது கட்டுடலைக் காட்டி, காதலிப்பது போல நடித்து தனது பாலியல் இச்சைக்குப் பல பெண்களை மயக்கி வீடியோ எடுத்தும் பயன்படுத்தி பணம் பரித்து வந்துள்ளான்.
தற்போது காசி கைது செய்யப்பட்ட நிலையில், பெண்களுடன் அந்தரங்கமாக அவர் இருப்பது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
இந்நிலையில் காசியின் தனிப்பட்ட கணினியைப் பறிமுதல் செய்த போலீசார், அவரது லேப்டாப், ஹார்ட் டிஸ்க் மற்றும் செல்போன்களைத் தேடி வருகின்றனர். அவரது செல்போனைப் போலவே கணினியும் பல கட்ட பாஸ்வேர்டுகளால் பாதுகாக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்
கணினியை முழுமையாகப் பரிசோதனை செய்தபின்பே என்னென்ன தகவல்களை அதில் காசி பதுக்கிவைத்துள்ளார் என்பது தெரியவரும் என்கின்றனர். நாகர்கோவில், கன்னியாகுமரியைச் சேர்ந்த காசியின் 7 நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள், 94981 11103 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், எனவும் அவர்களின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.