ட்விட்டரில் அஜித் ரசிகர்கள் படைத்த புதிய சாதனை..!!

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர். இவரின் திரைப்படங்கள் தமிழகம் எங்கும் மிக பிரம்மாண்டமாக வெளியாகும்.

சென்ற வருடம் இவரின் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் மிக பெரிய அளவில் வசூல் சாதனைகளை செய்தது.

அதனை தொடர்ந்து இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துவருகிறார். அதன் படப்பிடிப்புகள் கொரோனா காரணத்தினால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இவரின் பிறந்தநாளான வரும் மே 1 ஆம் தேதி அவருடைய ரசிகர்கள் இணையதளத்தில் கொண்டவுள்ளனர். மேலும் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்களும் காமன் DPயை வெளியிட்டனர்.

இந்நிலையில் இதனை ட்விட்டரில் அவரின் ரசிகர்கள் #thalaAJITHBdayGalaCDP என்ற ஹாஷ்டாகின் மூலம் ட்ரெண்ட் செய்துள்ளனர். மேலும் 24 மணி நேரத்தில் 4.9 மில்லியன் பேர் எந்த ஹாஷ்டாக்கில் ட்வீட் செய்தது, இதுவே முதல்முறையாகும்.