வெங்கட் பிரபுவின் சென்னை 28 பார்ட் 3யில் எந்த பிரபல நடிகர் நடிக்கவுள்ளாரா?

கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சென்னை 28, இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் ஜெய், சிவா, பிரேம்ஜி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி வசூல் ரிதியாக வெற்றியடைந்தது.

இந்நிலையில் இப்படம் வெளியாகி 13 வருடங்கள் ஆகியுள்ளதை வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் பிரபல நடிகர் விஷ்ணு விஷால் 14 வருடங்களுக்கு முன் இப்படத்தில் நடிக்க இயக்குனர் வெங்கட் பிரபுவை அனுக்கியுள்ளாராம்.

மேலும் சென்னை 28 மூன்றாம் பாகத்தில் தான் நடிக்க வாய்ப்பு தருமாறு கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு “சென்னை 28 மூன்றாம் பாகம் அல்லது புதிய கதையில் கண்டிப்பா சேர்ந்து படம் செய்ரோம்” என கூறியுள்ளார்.