உலகம் முழுவதும் கரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இயலாமல் மக்கள் பரிதவித்து வரும் நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் தொடர்ந்து வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் கோலோச்சி இருந்த ஐரோப்பிய நாடுகளில் தற்போது தாக்கம் குறைய துவங்கியுள்ளது.
சீனாவில் உள்ள யூகான் நகரில் இருந்து பரவ துவங்கிய கரோனா வைரஸின் காரணமாக உலக நாடுகளே ஸ்தம்பித்துள்ளது. இந்த வைரஸிற்கு உலகம் முழுவதும் 3,064,837 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 211,609 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 922,397 பேர் சிகிச்சை பெற்று பூரண நலனுடன் இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர்.
அமெரிக்காவில் நேற்று 23,196 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,010,356 ஆக உயர்ந்தது. நேற்று ஒரேநாளில் 1,384 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 56,797 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் 229,422 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் 331 பேர் உயிரிழந்து, மொத்த பலி எண்ணிக்கை 23,521 ஆக உயர்ந்துள்ளது.
இத்தாலி நாட்டில் 199,414 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் 333 பேர் உயிரிழந்து, மொத்த பலி எண்ணிக்கை 26,977 ஆக உயர்ந்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் 165,842 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் 437 பேர் உயிரிழந்து, மொத்த பலி எண்ணிக்கை 23,293 ஆக உயர்ந்துள்ளது. ஜெர்மனி நாட்டில் 158,758 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் 150 பேர் உயிரிழந்து, மொத்த பலி எண்ணிக்கை 6,126 ஆக உயர்ந்துள்ளது.