அமெரிக்காவில்…. ஒரே நாளில் 1384 பேர் பலி..

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. தற்போது 200-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 3,064,255 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரசால் 211,537 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 922,387 பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவில் தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது.

அமெரிக்காவில் இதுவரை 10 லட்சத்து 10 ஆயிரத்து 356 பேருக்கு கொரோனா வைரஸால் பாதித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் 1384 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆயிரத்து 797 ஆக அதிகரித்துள்ளது.