பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக சமீபகாலமாக வளம் வருபவர் நடிகை சன்னி லியோனி. ஆபாச பட நாயகியாக இருந்து சில காரணங்களால் அதை விட்டு விலகி இந்தியா பக்கம் வந்து நடிகையாக அறிமுகமானார். ஐட்டம் பாடலுக்கு அறிமுகமான சன்னி லியோன் போகபோக முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
கொரானா வைரஸால் உலகமே தவித்து தனிமைப்படுத்தப்பட்டு லாக்டவுனில் இருக்கும் நிலையில் சன்னி லியோனியும் அவரது வீட்டில் கணவருடனும், மூன்று குழந்தைகளுடனும் நேரத்தினை செலவிட்டு வருகிறார்.
இந்நிலையில் கணவரை பக்கத்தில் உட்காரவைத்து மது பாட்டிலை கையில் வைத்து இருவரும் குடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு மட்டும் இதெல்லாம் எப்படி கிடைக்கிறது என்று ஷாக்காகி கேள்வி கேட்டு வருகிறார்கள்.