தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பட்டியலில் குறுகிய காலகட்டத்தில் முன்னேறி வெற்றி பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து அதன்பின் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமானார்.
கடந்த 2018ல் வெளியான நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமாக்கப்பட்ட மகாநதி படத்தில் நடித்து தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வாங்கியுள்ளார். இதை தொடர்ந்து ரஜினிகாந்தின் அண்ணாத்தே படத்தில் அவரின் மகளாக நடித்து வருகிறார்.
இதையடுத்து தென்னிந்திய சினிமாவில் நடிகை, தயாரிப்பாளர், இயக்குநர் அவதாரம் எடுத்து பணியாற்றிய விஜய நிர்மலாவின் வாழ்க்கை வரலாறு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட் படத்திலும் கால் பதிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக உடல் எடையை முற்றிலும் கட்டுக்கோப்பாக வைத்து படுமோசமாக ஒல்லியாக உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
தற்போது கீர்த்தி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படங்கள் சமுகவலைத்தளத்தில் வைரலாகி பரவி வருகிறது.