இணையப்பாவனையில் சீனா இமாலய சாதனை

உலகிலேயே அதிக சனத்தொகையைக் கொண்ட நாடாக சீனா காணப்படுவது அனைவரும் அறிந்ததே.

இங்கு தொழில்நுட்ப வளர்ச்சியும் அதிகம் காணப்படுகின்றது.

இப்படியான நிலையில் இணையப்பாவனையாளர்களின் எண்ணிக்கை 904 மில்லியனை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதமே இச் சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கையானது 75.08 மில்லியனா காணப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னரான இரு வருடங்களில் இந்த எண்ணிக்கையினை எட்டியுள்ளது.

இதன்படி சீனாவில் மொத்த சனத்தொகையில் 64.5 சதவீதமானவர்கள் இணையத்தை பயன்படுத்திவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத் தகவலை China Internet Network Information Centre (CINIC) வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.