Google Meet அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்

தற்போதைய நிலையில் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளும் அப்பிளிக்கேஷன்கள் உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஒவ்வொரு நிறுவனங்களும் தமது அப்பிளிக்கேஷன்களில் புதிய வசதிகளை பயனர்களுக்கு அறிமுகம் செய்து வருகின்றன.

இந்த வரிசையில் Google Meet அப்பிளிக்கேஷனிலும் புதிய வசதி தரப்பட்டுள்ளது.

அதாவது Low-Light எனும் வசதியே புதிதாக உள்ளடக்கப்பட்டுள்ளது.

அதாவது வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளும்போது குறைந்தளவு வெளிச்சத்தினை கொண்ட காட்சிகளை உருவாக்க முடியும்.

இவ் வசதியானது Android மற்றும் iOS சாதனங்களுக்கான இரு அப்பிளிக்கேஷனிலும் தரப்பட்டுள்ளது.

இதேவேளை Google Duo அப்பிளிக்கேஷனில் இவ் வசதி ஏற்கணவே தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.