முன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றாக திகழும் டுவிட்டர் SMS மூலமாக டுவீ்ட் செய்யும் வசதி மற்றும் டுவீட்களை பெறும் வசதி என்பவற்றினை வழங்கியிரருந்தது.
இந்நிலையில் குறித்த சேவையினை பல நாடுகளில் நிறுத்துவதற்கு டுவிட்டர் தீர்மானித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு பிரச்சினைகளை கருத்திற்கொண்டே இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுவிட்டர் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ கருத்தின்படி தமது பயனர்களின் கணக்கினை பாதுகாக்க வேண்டிய தேவை தமக்கு இருப்பதாகவும், SMS வசதியின் ஊடாக அநாவசிய செயற்பாடுகள் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்ததை தாம் அறிந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
எனவே ஏற்கணவே SMS வசதியினை பயன்படுத்தியவர்கள் தற்போது மொபைல் சாதனங்களில் டுவிட்டர் அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்து தொடர்ந்து பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.