நடிகர் இர்ஃபான் கான் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட இர்ஃபான் கான் லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த ஆண்டு மீண்டும் வந்தார். கடந்த சனிக்கிழமை இவரின் தாயார் ஜெய்ப்பூரில் வயது முதிர்ச்சி காரணமாக உயிரிழந்தார்.
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு இருப்பதால் ஜெய்ப்பூருக்கு செல்ல முடியாததால் வீடியோ காலில் அழுதபடி தாயின் இறுதிச் சடங்கை பார்த்தார்.
இந்நிலையில், திடீரென இர்ஃபான் கான் உடல் நலத்தில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டதால் தற்போது மும்பையில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.