பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் உடல்நலக் குறைவால் இன்று காலமான நிலையில், அவருக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட்டைத் தொடர்ந்து ஸ்லம்டாக் மில்லியனர், லைஃப் ஆஃப் பை, ஜூராஸிக் வேர்ல்டு, அமேசிங் ஸ்பைடர் மேன் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ள இர்பான் கான் 2011-ம் ஆண்டு பான் சிங் தோமர் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இர்பான் கானின் தாயார் தாயாரான சயீதா பேகம், அண்மையில் ஜெய்ப்பூரிலுள்ள அவரது இல்லத்தில் வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தார்.
அவரின் முகத்தை கடைசியாக நேரில் பார்க்க முடியாமல் வீடியோ அழைப்பின் மூலம் பார்த்து அழுதார் இர்பான். தாய் இறந்த 3 நாட்களில் மகனும் இறந்துள்ளது ரசிகர்களை கவலை அடையச் செய்திருக்கிறது. 54 வயதான இவருக்கு, சுதாபா என்கிற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்.
மேலும், இர்பான் கானின் மறைவால் பாலிவுட் திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. அவரது மறைவுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். நடிகர் அமிதாப் பச்சன், உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.