யூடியூப் பயன்படுத்துபவரா நீங்கள்?

தற்போதுள்ள நிலைமையில் கொரோனா வைரஸ் தொடர்பான போலி தகவல்கள் சமூகவலைத்தளங்களின் ஊடாக பரப்பப்பட்டு வருகின்றது.

அதேபோன்று யூடியூப்பிலும் தவறான தகவல்கள் கொண்ட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றது.

இவை மக்களை அச்சம்கொள்ளச் செய்யக்கூடியதாக இருக்கின்றது.

இதனால் கூகுள், பேஸ்புக், டுவிட்டர் உட்பட மேலும் பல தளங்கள் பொய்யான தகவல்களை நீக்குவதில் முனைப்புக்காட்டி வருகின்றன.

இப்படியான நிலையில் யூடியூப்பில் Fact Checking எனும் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்படுகின்றது.

வீடியோக்களின் உண்மைத் தன்மையை அறியும்பொருட்டு அவ் வீடியோக்களில் எழுத்துருங்கள் மற்றும் இணைப்பு வடிலான தகவல்கள் வழங்கப்பட்டிருக்கும்.

இவை அனைத்தும் மூன்றாம் தரப்பிலிருந்து மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

எனவே பயனர்கள் குறித்த எழுத்து வடிவிலான தகவல்கள் மற்றும் இணைப்புக்களின் ஊடாக வீடியோக்களின் உண்மைத் தன்மையை ஒப்பிட்டு அறிந்துகொள்ள முடியும்.

இவ் வசதி தற்போது அமெரிக்காவில் உள்ள யூடியூப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.