உலகில் மீண்டும் கொடிகட்டிப் பறக்கும் சாம்சுங் நிறுவனம்

கடந்த சில வருடங்களாக ஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவி வந்தது.

இவ் இரு நிறுவனங்களும் தயாரிக்கும் உயர்தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளே இதற்கு காரணமாகும்.

இப்படியிருக்கையில் தற்போது ஆப்பிள் நிறுவனத்தினை பின்னுக்கு தள்ளி மீண்டும் முன்னிலையில் கொடிகட்டிப் பறக்கின்றது சாம்சுங் நிறுவனம்.

கடந்த வருடம் 5G ஸ்மார்ட் கைப்பேசியினை சாம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.

அத்துடன் Huawei, Vivo போன்ற வேறு சில நிறுவனங்களும் 5G கைப்பேசியினை அறிமுகம் செய்தன.

ஆனால் இதுவரை ஆப்பிள் நிறுவனம் தனது 5G கைப்பேசியினை அறிமுகம் செய்யவில்லை.

இந்நிலையில் சாம்சுங் நிறுவனத்தின் 5G கைப்பேசிகளே அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுப் பகுதியில் மாத்திரம் சுமார் 8.3 மில்லியன் சாம்சுங் 5G கைப்பேசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.