அறிமுகமாகியது Samsung Galaxy M31ஸ்மார்ட் கைப்பேசி

சாம்சுங் நிறுவனம் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை தற்போது அறிமுகம் செய்து வைத்துள்ளது.

Samsung Galaxy M31 எனும் குறித்த கைப்பேசியானது முதன் முறையாக ஐக்கிய இராச்சியத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இக் கைப்பேசியானது 6.4 அங்குல அளவு, Super AMOLED தொழில்நுட்பத்தினைக் கொண்ட Full HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Exynos 9611 mobile processor, பிரதான நினைவகமாக 6GB RAM மற்றும் 64GB அல்லது 128GB சேமிப்பு நினைவகமும் தரப்பட்டுள்ளது.

மேலும் இதன் சேமிப்பு நினைவகமானது microSD கார்ட்டின் உதவியுடன் 512GB வரை அதிகரிக்கக்கூடிய வசதியும் காணப்படுகின்றது.

தவிரர 32 மெகாபிக்சல்களைக் கொண்ட செல்ஃபி கமெரா, 64 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள், தலா 5 மெகாபிக்சல்களைக் கொண்ட இரு கமெராக்கள் என 4 பிரதான கமெராக்களையும் கொண்டுள்ளது.

தவிர 15W அதி விரைவு சார்ஜ் தொழில்நுட்பத்தினைக் கொண்ட 6,000 mAh மின்கலமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.