கொரோனா வைரஸ் காரணமாக பெரும்பாலான நாடுகளில் ஊடரங்கு சட்டம் பிறப்பித்துள்ள நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் செய்வதறியாது இணைய பயன்பாட்டிலே முழு நேரம் முழ்கியுள்ளனர்.
அதிலும் அதிகம் பேர் வீட்டில் இருந்து விதவித உணவுகளை கூகுள் மூலம் தேடி பார்த்து அதனை சமைத்தும் சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில் உலகளவில் ஊரடங்கு நேரத்தில் பலர் எந்த ஸ்நாக்ஸ்களை வீட்டிலேயே சமைக்கலாம் என்று அதிகம் பேர் தேடிய பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது.
தற்போது அவை எந்ததெந்த உணவுகள் என இங்கு பார்ப்போம்.
- மைக்ரோவேவ் அவனில் வாழைப்பழ பிரட்டை வைத்து கேக் செய்வது என்பது அதிகம் பேர் தேடியுள்ளனர்.
- சாக்லேட் கேக்குகள், கேரட் கேக் போன்றவை தேடப்பட்டுள்ளது.
- பிரபலமான டல்கோனா காப்பி ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
- வீட்டிலேயே ஃபிரைட் ரைஸ் செய்வது எப்படி என்பதை தேடித் தேடி பலர் சமைத்துள்ளனர்.
- குடும்பத்துடன் சாப்பிடும் டின்னர் உணவுகள் எனபதையும் பலர் தேடியுள்ளனர்.