பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து பிரபலமானவர் நடிகர் இர்ஃபான் கான். பாலிவுட் மட்டுமில்லாது ஹாலிவுட் படங்களான Life of Pi, Slumdog Millionaire, Jurassic World உள்ளிட்ட பல படங்களில் நடித்து உலக புகழ் பெற்று வந்தவர்.
இவருக்கு சுட்டப்பா சிக்தர் என்பவருடன் திருமணமாகி இரு ஆண் குழந்தைகளை போட்டோகிராபர் படிப்பினை முடித்து வேலை செய்து வருகிறார்கள்.
மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் வெப்சீரியஸ்களிலும் நடித்தும், விளம்பரங்களிலும் நடித்து பிரபலமானார். இவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு நியூரோஎண்டோகிரைன் என்ற நோயினால் உருவாகும் கட்டியால் அவதியுற்று சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் தீவிர சிகிச்சைக்கு பிறகு இன்று காலை ஏப்ரல் 29ல் மரணம் அடைந்துள்ளார். இர்ஃபான் கானின் தாயார் கடந்த வாரம் தான் இறந்துள்ளார். அதற்குள் இப்படி ஒரு நடிகரின் இறப்பினை சினிமாத்துறையினரும், பிரபலங்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.