அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்து பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, அதனால் என்ன என்று பொறுப்பற்ற வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமேசான் மழைகாடுகள் பகுதியில் கொரோனா பாதிப்பால் அதிகம் பேர் உயிரிழந்து வருகின்றனர்.
இதனால், ஒரு கல்லறைக்குள் ஐந்து உடல்களை அடக்கம் செய்யும் நிலையில் பிரேசில் தள்ளப்பட்டுள்ளது.
தற்போதுவரை அந்நாட்டில் 5,466பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 78,100பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், ஒரேநாளில் 6276 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
ஆனால், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, இதனால் என்ன? என்னை மன்னித்து விடுங்கள், என்னை என்ன செய்ய சொல்கிறீர்கள்? என்னால் அதிசயங்கள் நிகழ்த்த முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு அந்நாட்டு மக்கள் கடும் கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பிரேசில் மக்கள் இறப்புசான்றிதழ் வாங்க வரிசையில் காத்திருக்கின்றனர். மேலும், பல இடங்களில் குளிரூட்டும் நிலையங்களில் சடலங்கள் அடைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தான் அதிபர் இவ்வாறு பேசியுள்ளார். இதனால், மக்கள் தங்கள் கோவத்தையும், எதிர்ப்பையும் கடுமையாக வெளிப்படுத்தி வருகின்றனர்.