லண்டனில் சாலையில் சடலமாக கிடந்த இந்தியரின் பிரேத பரிசோதனை முடிவில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் பல்ஜித் சிங் (37). இவர் லண்டனில் வசித்து வந்தார்.
இந்நிலையில் வடக்கு லண்டனின் Hayes-ல் பல்ஜித் பேச்சு மூச்சின்றி கிடந்ததை பார்த்தவர்கள் இது குறித்து கடந்த 25ஆம் திகதி இரவு 11 மணிக்கு பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து மருத்துவ குழுவுடன் பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்த நிலையில் பல்ஜித் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இந்த நிலையில் பல்ஜித்தின் பிரேத பரிசோதனை முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதோடு பலமாக தாக்கப்பட்டதும் தெரிந்தது.
இது குறித்து பொலிசார் கூறுகையில், பல்ஜித் கொல்லப்படுவதற்கு முன்னர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் பதிவை ஆராய்ந்து வருகிறோம்.
பல்ஜித் உயிரிழப்பதற்கு முன்னர் இரண்டு பேரை சந்தித்துள்ளார், பின்னர் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அவர் கொல்லப்பட்டுள்ளார்.
தொடர்ந்து சம்பவம் தொடர்பில் விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.