கமலுக்கு ஜோடியாக நடித்த 38 வயது அபிராமியா இது…?

சினிமாத்துறையில் கொடிக்கட்டி பறந்த நடிகைகள் படவாய்ப்பில்லாமல் காணாமல் போய்விடுகிறார்கள். அந்தவகையில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த மூத்த நடிகைகள் ஆள் அடையாளம் தெரியாமல் சினிமாவை விட்டு காணாம் இருப்பார்கள். அர்ஜுன் நடிப்பில் 2001ல் வெளியான வானவில் படத்தில் கதாநாயகியாக நடிகையாக அறிமுகமானவர் நடிகை அபிராமி.

கேரளாவை பூர்வீகமாக கொண்டு தமிழ், மலையாளம், தெலுங்கு என பல படங்களில் நடித்து வந்தார். அதன்பின் நடிகர் கமல்ஹாசன் நடித்த விருமாண்டி படத்தில் நடித்து புகழ் பெற்றார். இப்படத்திற்கு பின் சுமார் பத்து வருடங்களாக படவாய்ப்ப்பில்லாமல் பிரபல தொலைக்காட்சி சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்றினார்.

தற்போது மீண்டும் படவாய்ப்ப்பிற்காக உடல் எடையை குறைத்து க்ளாமராக தோற்றம் அளித்து படங்களில் நடித்தார். கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தாலும் சிறு கதாபாத்திரங்களில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் நடிகை அபிராமியின் உடலை குறைத்து படுக்ளாமரில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.