இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வந்ததால், ஊரடங்கு அதிரடியாக அமலானது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், தமிழகத்தில் 2,323 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. 27 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் மாவட்ட வாரியான பட்டியலில் சென்னையில் 768 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இன்று மேலும் 138 பேருக்கு கரோனா உறுதியானதை தொடர்ந்து, மொத்த பாதிப்பு 906 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மற்றும் மதுரையில் தலா 5 பேருக்கும், ராமநாதபுரம் மற்றும் காஞ்சிபுரத்தில் தலா 3 பேருக்கும், பெரம்பாலூரில் 2 பேருக்கும், திருவள்ளூர், ராணிப்பேட்டை சேலம் மற்றும் கடலூரில் தலா ஒருவருக்கும் கரோனா உறுதியாகியுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பின் மருத்துவர் குழு பிரதீப் கவுர், ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, கொரோனா வைரஸ் நீண்டகாலம் இருக்கும்.
ஒட்டுமொத்தமாக ஊரடங்கை தளர்த்த முடியாது, படிப்படியாகவே அமல்படுத்த முடியும். தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாகத்தான் தளர்த்த முடியும். தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தனர்.