சமீப காலமாக நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் போன்ற OTT ப்ளாட்ஃபார்ம்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக வெப் மற்றும் ஆப் என கலக்கி கொண்டிருகின்றன.
இப்படியான OTT தளங்கள் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் வெப் சீரிஸ்கள் என்றால் அது மிகையல்ல. அந்த வகையில், ஹிந்தி மொழியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற வெப் சீரிஸ் லஸ்ட் ஸ்டோரிஸ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிர்னது.
நான்கு கதைகளை ஒரு கதையாக அடக்கி விறுவிருப்பு எதிர்பார்ப்பு டிவிஸ்டுகள் என விரியும் இத்தொடரை பிரபல இயக்குனர்கள் அனுராக் காஷ்யப், சோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரன் ஜோகர் ஆகியோர் இயக்கி இருந்தனர்.
நடிகைகள் மனிஷா கொய்ராலா, ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி உள்ளிட்டோர் இதில் நடித்திருந்தனர். இத்தொடரில் தான் கியாரா அத்வானி, பெற்றோர் முன்பு சுய இன்பம் செய்யும் காட்சியில் நடித்து சர்ச்சையில் சிக்கினார்.
மேலும், நான் அந்த காட்சியில் நடித்ததை பார்த்து என்னுடைய பெற்றோர்கள் என்னை பாராட்டினார்கள் என்று கூறினார். ஆனால், இந்த காட்சி குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இப்படி சர்ச்சைகளுக்கு நடுவே “லஸ்ட் ஸ்டோரிஸ்” வெப் சீரிஸ் தொடர் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது. இதில் ஒரு கதையில் அமலா பால் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த கதையை நந்தினி ரெட்டி இயக்குகிறார். ஆடை படத்தில் அமலா பாலின் நடிப்பு அவரை கவர்ந்துள்ளது.
இதையடுத்து அவர் அமலா பாலை அணுகி லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் தொடரில் நடிப்பது குறித்து கேட்டார். மிகவும் உற்சாகமடைந்த அமலா, உடனடியாக சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் இதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி காட்சிகளில் நடிக்கவுள்ளார் அமலா பால் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அநேகமாக, கியாரா அத்வானி நடித்த கதாபாத்திரத்தில் தான் அமலா பால் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.