உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள தற்போதைய நிலையில் வீடியோ கொன்பரன்ஸிங் அப்பிளிக்கேஷன் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை தெரிந்ததே.
இதில் Zoom அப்பிளிக்கேஷன் அண்மையில் அறிமுகமாகி பிபல்யமாகியிருந்த நிலையில் ஏற்கணவே அறிமுகம் செய்யப்பட்டிருந்த பல நிறுவனங்களின் அப்பிளிக்கேஷன்களில் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
இப்படியிருக்கையில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Team அப்பிளிக்கேஷனை நாள்தோறும் 75 மில்லியன் வரையான பயனர்கள் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அப்பிளிக்கேஷனில் ஒரே நேரத்தில் 250 நபர்கள் இணைந்திருக்க முடியும்.
இதேவேளை Microsoft Team அப்பிளிக்கேஷன் ஆனது ஒரு மாதத்தில் 200 மில்லியன் பயனர்கள் படுத்தியிருந்ததுடன், 4.1 பில்லியன் நிமிடங்கள் வரை அவர்களது உரையாடல்கள் நீடித்திருந்ததே முன்னைய சாதனையாக இருந்தது.
தற்போது இச் சாதனை முறியடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.