தந்தையின் மரணமடைந்த சோகத்தில் மீளா துயரில் ஆழ்ந்துள்ளதாக தன் வார்த்தைகள் தடுமாறுவதாக பதிவிட்டுள்ளார் அவரது மகன் பாபில்.
1988ம் ஆண்டு முதல் ஹிந்தி படங்களில் நடித்து வந்த இர்பான் கான், 2011ல் பான்சிங் தோமர் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.
2017ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ஹிந்து மீடியம் நல்ல வரவேற்பை பெற்றது, தொடர்ந்து ஹாலிவுட் படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.
தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக 2018ம் ஆண்டு அறிவித்த இர்பான் கான், அதற்காக லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இர்பான் கான், சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர், இந்நிலையில் இவரது மகனான பாபில் இன்ஸ்டாகிராமில்,
எனக்கு அனுதாபங்கள் தெரிவிக்கும் நண்பர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன். ஆனால் என்னால் பதிலளிக்க முடியவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். ஏனெனில் என் வார்த்தைகள் தடுமாறுகின்றன என பதிவிட்டுள்ளார்.