மத்திய அரசு விடுத்த அதிரடி அறிவிப்பு..!!

மே 4 முதல் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

நிலைமையை முழுமையாக ஆராய்ந்த பிறகு மேலும் 2 வாரங்களுக்கு இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸை கட்டுக்குள் கொண்டு வர, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இது சம்பந்தமாக அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் அவ்வப்போது வீடியோ கான்பரஸ்மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டங்களிலேயே 3வது முறையாக ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அதேசமயம், நாடு முழுவதும் சிவப்பு மண்டலப் பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து மண்டலங்களிலும் ரயில், விமான, மெட்ரோ, பஸ் போக்குவரத்து செயல்படாது. பள்ளி கல்லூரிகள் கல்வி நிறுவனங்கள் இயங்காது. பயிற்சி மையங்கள், பயிற்சி நிலையங்கள் செயல்படாது.

இதேவேளை, சிவப்பு மண்டலப் பகுதிகளில் உள்ள கண்டெய்ன்மென்ட் ஸோன்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையுடன் மேலும் சில தடைகள் கூடுதலாக விதிக்கப்படுகின்றன. அதன்படி, சைக்கிள் ரிக்ஷாக்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் ஓடுவது, டாக்சிகள், கேப் வாகனங்கள் இயக்குவது, மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து, சலூன் கடைகள், ஸ்பா, மற்றும் பார்பர்ஷாப்கள் செயல்படுவது தடை விதிக்கப்படுகிறது.