பிரபல தொலைக்காட்சி சீரியலான பகல் நிலவு மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று பிரபலமானார்.
இதன்பின் சில காரணங்களால் பகல் நிலவு சீரியலில் இருந்து விலகி வேறொரு தொலைக்காட்சி தொடரான இரட்டை ரோஜா சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகி நடிக்க ஆரம்பித்தார். தற்போது கொரானா வைரஸால் படப்பிடிப்பில்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார்.
இந்நிலையில் நேரத்தினை கழிக்கவும் உடற்பயிற்சி மேற்கொள்ளவும் கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டு வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஓரே நேரத்தில் உடற்பயிற்சி, டான்ஸ் என கலக்கி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவதை ரசிகர்கள் பகிர்ந்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.