டிவி சானல் என்றும் மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் முதன்மையானதாக விளங்குகிறது. டிவி நிகழ்ச்சிகள், சீரியல்கள் என மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீட்டினுள் முடங்கியுள்ளனர். டிவி சானல்களும் பழைய ஹிட் சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன.
தொலைக்காட்சி சானல்களுக்கு பார்க் ரேட்டிங் முக்கிய அளவீடாக கருதப்படுகிறது.
இந்நிலையில் ஊரடங்கிற்கு பின் டிவி பார்ப்பவர்களின் எண்ணிகை 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதே போல மக்கள் புராண சீரியல்கள், திரைப்படங்களை காண அதிகம் விருப்பம் காட்டுகிறார்கள் BARC வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.