தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் வசூலில் முதன்மையாக திகழ்ந்து வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் தளபதி விஜய்.
ரஜினியை வசூலில் தோற்கடிக்க ஆளே இல்லை என்று தான் கூறவேண்டும். ஆனால் 2000ஆம் ஆண்டில் இருந்து ரஜினி படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார்.
இதனால் ரஜினியின் மார்க்கெட் கொஞ்சம் குறைய துவங்கியது. ஆனால் அப்போது அவர்க்கு உடல்நலம் சரியாக இல்லை என்பதும் மிக பெரிய ஒரு காரணம்.
அப்போது தான் விஜய்யின் மார்க்கெட் அதிகரிக்க துவங்கியது. அதை தற்போது விவரமாக 2000ஆம் ஆண்டில் இருந்து 2020ஆம் ஆண்டு வரை ரஜினிக்கு நிகராக விஜய் எப்படி வளர்ந்தார் என்று தான் பார்க்க போகிறோம்.
# 2000ஆம் ஆண்டில் இருந்து 2010ஆம் ஆண்டு வரை ரஜினி வெறும் 4 படங்கள் மட்டுமே நடித்தார்.
1. பாபா
2. சந்திரமுகி
3. சிவாஜி
4. எந்திரன்
# ஆனால் விஜய் 2000ஆம் ஆண்டில் இருந்து 2010ஆம் ஆண்டு வரை 25 படங்கள் நடித்து வந்தார்.
1. சச்சின், குஷி, ஷாஜகான் போன்ற காதல் படங்கள்.
2. வசீகர, பிரிஎண்ட்ஸ் போன்ற காமெடி படங்கள்.
3. திருமலை, கில்லி, போக்கிரி போன்ற மாஸ் படங்கள்.
4. திருப்பாச்சி, சிவகாசி போன்ற குடும்ப படங்கள்.
இதில் தான் ரஜினியை விட அனைத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக துவங்கினார் தளபதி விஜய்.
# 2010ஆம் ஆண்டில் இருந்து 2020ஆம் ஆண்டு வரை 7 படங்கள் மட்டுமே நடித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
1. கோச்சடையான்
2. லிங்கா
3. கபாலி
4. காலா
5. 2.0
6. பேட்ட
7. தர்பார்
# ஆனால் விஜய் 2010ஆம் ஆண்டில் இருந்து 2020ஆம் ஆண்டு வரை 14 படங்கள் நடித்துள்ளார்.
1. காவலன், நண்பன் போன்ற சிறந்த ரீமேக் படங்கள்.
2. துப்பாக்கி, கத்தி போன்ற பிளாக் பஸ்டர் படங்கள்.
3. மெர்சல் சர்கார், பிகில் போன்ற வசூல் சாதனை படைத்த படங்கள்.
இப்படங்கள் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நிகராக விஜய் வளர்வதற்கு காரணமாக இருந்தது. ஆம் இப்படங்கள் தான் விஜய்யின் மார்க்கெட்டை மிக பெரிய அளவில் உய்ரித்தியது.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினியை விட ஒரு படி வசூலில் முன் சென்று விட்டார் விஜய் என்று கூட கூறலாம்.