அண்மையில் நடிகை ஜோதிகா தஞ்சை அரசு மருத்துவமனையின் நிலை, கோவில் பற்றி பேசியது சில சர்ச்சைகளாக முடிந்தது அனைவரும் அறிந்ததே.
அதே வேளையில் அவருக்கு ஆதரவாக சிலர் குரல் கொடுத்தனர். நடிகர் சூர்யாவும் அது குறித்து விளக்க அறிக்க வெளியிட்டார்.
இதில் அவர் ஜோதிகா பேசியதன் அர்த்தத்தை அறிவேன். அவர் தவறாக எதுவும் சொல்லவில்லை. எத்தனை பேர் தவறாக புரிந்து கொண்டு விவாதம் செய்து வெறுப்பு காட்டினீர்கள். தவறாக புரிந்து கொண்டிருந்தால் உடனே விளக்கம் கேட்கலாம். மக்கள் இதை செய்யமாட்டார்கள் என கூறியுள்ளார்.
ஜோதிகா தரப்பில் நியாயம் இருப்பதாக சில சமூக ஆர்வலர்களும் கூறினர். இந்நிலையில் சர்க்கார் படத்தில் மிரட்டலாக நடித்த நடிகை வரலட்சுமி பேசியுள்ளார்.