கிரிக்கெட் வீரரை திருமணம் செய்து கொள்ளப்போகிறாரா நடிகை தமன்னா.?

நடிகை தமன்னா 2005 ஆம் ஆண்டு வெளியான கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வருகிறார். விஜய், அஜீத், சூர்யா, கார்த்தி, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தமிழ். தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக தமன்னா வீட்டிலேயே முடங்கி இருந்தாலும் அவரைப்பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்கை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது முற்றிலும் வதந்தி என தமன்னா தரப்பு தெரிவித்துள்ளது. துபாயில் நகைக்கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தமன்னாவும், அப்துல் ரசாக்கும் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிவித்துள்ளனர்.