தமிழில் பொன்மகள் வந்தாள், தெய்வம் தந்த வீடு, அவளும் நானும் உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்திருக்கும் மேக்னா வின்சென்ட், மலையாள சீரியல்களிலும் நடித்து வருகிறார். டிவி தொடர்கள் மட்டுமின்றி பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான ‘கயல்’ படத்திலும் மேக்னா நடித்திருக்கிறார்.
இவர் டான் டோனி என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017-ம் ஆண்டு எர்ணாகுளத்தில் உள்ள தேவலாயத்தில் இவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்தில் ஏராளமான திரைத்துறையினரும், சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
திருமணம் முடிந்து ஓராண்டிலேயே டான் டோனி – மேக்னா தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட, இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில் இருவரும் முறைப்படி நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து பெற்றுள்ளனர். இதையடுத்து டான் டோனி தற்போது மறுமணத்துக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகை மேக்னா வின்சென்ட் தன்னுடன் சீரியலில் நடித்த நடிகர் விக்கி உடன் காதலில் இருப்பதாகவும், விரைவில் மறுமணம் செய்ய முடிவெடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் இந்த காதலால் தான் மேக்னாவுக்கும் அவருடைய முதல் கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து நடிகை மேக்னா வின்சென்ட் ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை.