கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பின்னர் மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது மேலும் 17 -ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை தொடர்கிறது.
இதனால், இதுவரை பொறுத்திருந்த குடிமகன்கள் இனியும் பொறுக்க முடியாது என கள்ளச்சாரயம் வீட்டிலேயே காய்ச்சி போலீசாரிடமும் சிக்கி வருகின்றனர்.
இதனிடையே, சில நிபந்தனைகளுடன் மதுபானக் கடைகளை திறைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கும் நிலையில் டெல்லி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மதுபானக் கடைகளை இன்று முதல் திறக்க உத்தரவு பிறப்பித்தது.
இதைத்தொடர்ந்து, மதுபானக் கடைகளின் முன்பு ஆயிரக்கணக்கான மது பிரியர்கள் ஒன்று கூடினர். அதிகமாக கூட்டம் கூடிய ஒரு சில இடங்களில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
- மேலும், தமிழகத்திலும் மே 7 முதல் மதுபான கடைகள் திறக்கப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். அதில், மதுபானக் கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
- ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் உள்ள இடைவெளி 6 அடி தூரமாக பராமரிக்கப்பட வேண்டும்.
- மதுபானக் கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதிக்கக் கூடாது.
- மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுகிறது.
- அனைத்து மதுபானக் கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
- ஒவ்வொரு மதுபானக் கடைகளிலும் தேவைக்கேற்ப கூடுதல் நபர்களை பணியமர்த்தி கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும்.
மேற்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு தமிழகத்தில் மதுபானக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும் மதுபானக் கூடங்கள் திறப்பதற்கு அனுமதி இல்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பெண்கள் மது வாங்க வரிசையில் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ளார். அதில், “பாருங்க யாரு மதுபானக் கடையில் வரிசையில் நிற்கிறார்கள்? இன்னமும் குடிகார ஆண்களிடமிருந்து பெண்களைக் காக்க வேண்டும் என்று பேசுகிறோம்” என்று தெரிவித்துள்ளார் ராம்கோபால் வர்மா.
Look who’s in line at the wine shops ..So much for protecting women against drunk men ? pic.twitter.com/ThFLd5vpzd
— Ram Gopal Varma (@RGVzoomin) May 4, 2020