தமிழ் சினிமாவில் 21 ஆண்டுகள் கடந்த பின்னும் உச்ச நடிகைகளில் வலம் வரும் ஒரே நடிகை த்ரிஷா மட்டும் தான். 1999-ல் வெளியான ஜோடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த த்ரிஷா பின்னர், 2002ல் வெளிவந்த “மௌனம் பேசியதே” படத்தின் மூலம் கதாநாயகியாக தடம் பதித்தார். முதல் ப டமே மெகா ஹிட் அடித்து மார்க்கெட்டின் உச்சத்தில் அமர்ந்தார்.
அதையடுத்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து, புகழின் உட்சத்தில் இருந்து வந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் கொடிகட்டி பறந்த த்ரிஷா சமீப நாட்களாக கதா நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து ஹாட்ரிக் வெற்றி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், திரிஷா இன்று தனது 37-வது பிறந்தநாளை கொரோனா ஊரடங்கால் வீட்டிலிருந்தபடியே சிம்பிளாக கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள், நண்பர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.