கோதுமை மாவில் பணத்தை வைத்து ஏழைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது யார்?

கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பல கோடி ஏழை எளிய மக்கள் இந்தியாவில் வறுமையில் வாடி வருவதாகவும் அவர்களுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரமுகர்கள் பலரும் கோடிக்கணக்கில் நிதி உதவியும் பொருளுதவியும் கொடுத்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் ஏழை மக்களுக்கு ஒரு கிலோ கோதுமை மாவு பாக்கெட்டில் ரூ.15 ஆயிரத்தை பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் இன்ப அதிர்ச்சியளித்துள்ளார் என்ற தகவல் காட்டுத்தீயாய் பரவியது.

இந்த மாவை பசியில் இருந்த ஏழைகள் மட்டுமே வாங்கிச்சென்றனர் என்றும் மற்றவர்கள் உதாசினப்படுத்தி சென்றதாகவும், மேலும் இதனை விநியோகித்த நபர்களுக்குக் கூட தெரியாது இதில் பணம் இருக்கிறது என்றும் பிரபல நடிகரின் யோசனையை அனைவரும் பெரிதாக விமர்சித்து வந்தனர்.

ஆனால் இதுகுறித்து அமீர்கான் தரப்பு ஒன்றும் கூறாமல் இருந்துவந்தது. இதனால் இதனை செய்தது யாராக இருக்கும் என்று மக்கள் அதிகமாக குழம்பிக்கொண்டிருந்தனர்.

ஆனால், இதுகுறித்து எந்தவித விளக்கமும் அளிக்காமல் மவுனம் காத்துவந்த அமீர்கான் தற்போது டுவிட்டரில், கோதுமை பாக்கெட்டுக்குள் பணம் வைத்துக் கொடுக்கும் மனிதன் நானல்ல. அது முற்றிலும் போலியான தகவலாக இருக்கலாம் அல்லது அதை செய்த ராபின் ஹுட் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள கூடாது என விருப்பப்பட்டிருப்பார் என பதிவிட்டுள்ளார்.