நாகர்கோவிலில் பெண்களை ஆபாச படம் எடுத்து, மிரட்டி பணம் பறித்து வந்த இஞைர் காசியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினருக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி என்ற சுஜி(26). பொறியியல் பட்டதாரியான இவர் சமூகவலைத்தளங்கள் மூலம் சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரிடம் நெருங்கிப் பழகி புகைப்படம் எடுத்து மிரட்டி லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகைகளைப் பறித்துள்ளார்.
தன்னை மட்டுமின்றி, இன்னும் பல பெண்களை இவ்வாறு மிரட்டி வருவதை அறிந்த குறித்த பெண் மருத்துவர் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
பின்பு காசியைக் கைது செய்த பொலிசார் நான்குனேறி சிறையில் அடைத்ததோடு, அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. மேலும் காசியின் வீட்டினைச் சோதனை செய்த போது அவரது மொபைல் போன், கணினி என பொலிசார் கைப்பற்றி சேதனை செய்ததில் பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இருந்துள்ளது.
இந்நிலையில் காசியை பொலிசார் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து பாளையங்கோட்டை சிறையில் இருந்த காசியை பலத்த பாதுகாப்புடன் பொலிசார் அழைத்து வந்ததோடு, மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.
அங்கு அவரை விசாரித்த நீதிபதி 3 நாட்கள் பொலிஸ் காவலில் எடுத்து காசியை விசாரிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த கோழி கடை காசிடெமோ பத்திரிகையாளர் புகைப்படம் எடுப்பதை பார்த்து காதல் சிக்னல் காண்பித்த போது சிக்கிய புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதனை அவதானித்த பலரும் காதல் செய்கை காட்டவில்லை என்றும் முகத்தினை மறைப்பதற்கு இவ்வாறு செய்துள்ளார் என்று கூறிவருகின்றனர்.