காசி தொடர்பில் கண்ணீருடன் பாதிக்கப்பட்ட பெண் கூறிய உண்மைகள்..!!

கன்னியாகுமரி காசி விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பி பூதாகரமாக வெடித்து வரும் நிலையில் தற்போது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி என்ற சுஜி(26). படிக்கிற காலத்தில் இருந்தே பெண்களை மயக்கி, ஏமாற்றி தன் வலையில் விழ வைத்து, அந்த ஆபாச வீடியோவை காட்டியே லட்சக்கணக்கில் பணம் பறித்து 4 மாடி வீடு, ஏகப்பட்ட சொத்து என வாங்கிக் குவித்துள்ளனர்.

முதன்முதலில் காசியால் ஏமாற்றப்பட்ட ஒரு பெண் டாக்டர் புகார் கொடுத்த பின்பே காசியின் சுயரூபம் வெளியே வந்தது. ஜிம் பாடி போட்டோக்களை காட்டி காட்டியே ஏகப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை விழ வைத்தது மட்டுமின்றி டிக்டாக்கின் மூலமும் பல பெண்களை ஏமாற்றியுள்ளார்.

பெண் டாக்டர், பெண் என்ஜினியர், வேறு ஒரு இளம்பெண்கள் என அடுத்தடுத்த புகார்கள் பதிவாகி வருகின்றன. அது மட்டுமல்ல, பலரும் ஆதாரங்களுடன் வீடியோக்களை சோஷியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகின்றனர்.

அதன்படி ஒரு பெண், “காசி கும்பலால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருத்தி. இப்போது நான் இந்தியாவிலேயே இல்லை. அதனால் இந்த தகவலை குமரி மாவட்ட பொலிசாரிடம் தெரிவிக்க வேண்டும். காசி தனி ஆள் இல்லை. பெரிய கும்பலாக சேர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறார்கள். அவர்களின் குரூப் போட்டோவில் முக்கிய கூட்டாளிகளின் படங்களும் இருக்கின்றன. அவங்களுக்கும் இதில் தொடர்பு உண்டு. அதனால் அவங்களையும் விட்டுவிடக்கூடாது” என்று கண்ணீர் வடித்துள்ளார்.

தற்போது கணேசபுரத்தில் உள்ள காசியின் வீட்டில் அவரது செல்போன், லேப்டாப், 2 ஹார்ட் டிஸ்க், 7 ஏடிஎம். கார்டுகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் அதில் இருந்ததையடுத்து, அவரது நண்பர்களை பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

நேற்று விசாரணைக்காக பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அழைத்து வரப்படவில்லை. அதனால் இன்ற எப்படியும் காசியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

காசியை விசாரித்தால் தான், அந்த விஐபிக்கள் யார், நடிகரின் மகள் யார், சப்இன்ஸ்பெக்டரின் மகள் யார், போட்டோக்களில் உள்ள அந்த பிரபலங்கள் யார், என்றெல்லாம் தெரியவரும். எப்படி இருந்தாலும் அனைத்து குற்றங்களும் நிரூபிக்கப்பட்டால், பொள்ளாச்சி சம்பவத்தை போல இல்லாமல் காசிக்கு தண்டனை கிடைத்தே ஆக வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றது.