தனது 5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட Mi 10 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை Xiaomi நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.
கடந்த மாதம் அறிமுகம் செய்யப்படவிருந்து குறித்த கைப்பேசியானது கொரோனா பரவல் பிரச்சினையின் காரணமாக தற்போது அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதன்படி எதிர்வரும் 8 ஆம் திகதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசியானது 6.67 அங்குல அளவு, AMOLED தொழில்நுட்பத்தினை உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
அத்துடன் Snapdragon 865 processor, பிரதான நினைவகமாக 12GBRAM மற்றும் 512GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும் 20 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 108 மெகாபிக்சல்கள், 13 மெகாபிக்சல்கள், தலா 2 மெகாபிக்சல்களை உடைய இரு கமெராக்கள் என மொத்தமாக 4 பிரதான கமெராக்களை கொண்டுள்ளது.
எனினும் இக் கைப்பேசியின் விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.