வைபர் மற்றும் வாட்ஸ் ஆப்பினைப் போன்று டெலிகிராம் அப்ளிக்கேஷனும் குறுஞ்செய்தி சேவையை வழங்கி வருகின்றது.
எனினும் இவ் அப்பிளிக்கேஷன் ஆனது இதுவரை காலமும் எதிர்பார்த்த அளவு வரவேற்பினை மக்கள் மத்தியில் பெற்றிருக்கவில்லை.
ஆனால் தற்போதைய சூழ்நிலை காரணமாக பல மில்லியன் மக்கள் இதனைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
குறித்த அப்பிளிக்கேஷன் ஆனது வைபர் மற்றும் வாட்ஆப் என்பவற்றினை விடவும் பாதுகாப்பான அம்சங்களை கொண்டிருப்பது இதற்கு முக்கியமாக காரணமாகும்.
இந்நிலையில் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 500 மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டிருப்பதுடன் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்னர் 300 மில்லியன் தரவிறக்கக்கங்களை எட்டிருந்ததுடன் கடந்த மாதம் வரை 400 மில்லியனாக காணப்பட்டது.
இப்படியான நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மேலும் 100 மில்லின் தரவிறக்கங்களுடன் 500 மில்லியன் எனும் மைல்கல்லை எட்டியுள்ளது.
இது தவிர 400 மில்லியன் மாதாந்த பயனர்களையும் எட்டியுள்ளமை விசேட அம்சமாகும்.