பொதுவாக திருமணமானவுடன் புதுமண தம்பதிகள் சீக்கிரம் கருத்தரித்துவிடுவார்கள். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் தம்பதிகள் பலரும் தங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின்னரே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென்று நினைத்து, செட்டில் ஆகும் வரை குழந்தைப் பெறுவதைத் தள்ளிப் போடுகிறார்கள்.
சில தம்பதிகள் குழந்தைப் பெற்றுக் கொள்ள ஆசைப்படுவார்கள். ஆனால் அவர்களால் முடியாமல் போகும்.
சில அதிர்ஷ்டமான தம்பதிகள் முதல் முயற்சியிலேயே கருத்தரித்துவிடுவார்கள், சிலருக்கு பல காலம் எடுக்கும். ஆனால் எத்தனை முறை உறவு கொண்டால் கருத்தரிக்க உதவியாக இருக்கும் என்பது குறித்த ஒன்று புதிய ஆய்வு உள்ளது என்பது தெரியுமா? ஆம், சமீபத்தில் தான் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சராசரியாக தம்பதிகள் கருத்தரிக்க முயற்சி செய்யத் தொடங்கிய நேரத்தில் இருந்து 78 முறை உறவு கொள்கிறார்கள். இந்த 78 முறையானது 158 நாட்கள் அல்லது சுமார் 6 மாத காலமாகும்.
1,194 பெற்றோர்களை கொண்டு ஒரு ஆய்வு செய்த போது, அதில் பெரும்பாலான தம்பதிகள் கருத்தரிக்க முயற்சிக்கும் போது ஒரு மாதத்திற்கு 13 முறை உறவு கொண்டிருந்ததைக் கண்டறிந்தனர்.
இவ்வளவு முறை உறவு கேட்பதற்கு வேடிக்கையாக தோன்றினாலும், கருத்தரிக்க முயற்சிப்பதில் சில கவலைகள் உள்ளன.
இந்த ஆய்வில், கருத்தரிக்க முயற்சிக்கும் போது, பலரும் உறவு கொள்வதை ஒரு வேலையாக உணர்வதை ஒப்புக் கொண்டுள்ளனர்.
அதில் 43 சதவீத மக்கள் கட்டாயம் கருத்தரிக்க வேண்டுமென்ற ஒருவித அழுத்தம் மற்றும் பயத்துடன் உறவில் ஈடுபடுவதால், எங்கு நம்மால் கருத்தரிக்க முடியாமல் போகுமோ என்ற எண்ணம் தோன்ற ஆரம்பிப்பதும் தெரிய வந்தது.
பொதுவாக கருத்தரிப்பது கடினமான வேலை மற்றும் மன அழுத்தமாக உணரக்கூடும். ஆனால் நீங்கள் உங்கள் குழந்தையின் மீது கவனம் செலுத்தும் போது, ஒருவரை ஒருவர் நினைவில் வைத்து அன்பை பகிர்ந்து கொண்டால் நிச்சயம் உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சில மக்கள் கருத்தரிப்பது என்பது உறவு கொள்ளும் நிலையைப் பொறுத்தது என்று நம்புகின்றனர். அதில் மிகவும் பிரபலமான நிலையாக மூன்றில் ஒரு பகுதி மக்கள் நினைப்பது டாக்கி ஸ்டைல் தான். இதை சுமார் 36 சதவீத தம்பதிகள் பயன்படுத்துகின்றனர்.
பல நிபுணர்களின் கூற்றுப்படி, கருத்தரிக்க நினைக்கும் தம்பதிகள் ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் உறவில் ஈடுபடக்கூடாது. பல முறை உறவில் ஈடுபட்டால் கருத்தரிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்று பலரும் நினைக்கலாம்.
ஆனால் உண்மையில், அடிக்கடி உடலுறவு கொண்டால், ஆரோக்கியமான விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். இதன் விளைவாக கருத்தரிப்பதற்கான வாய்ப்பும் குறையும். ஆகவே எந்த தம்பதிகள் 2 நாட்களுக்கு ஒரு முறை உறவில் ஈடுபடுகிறார்களோ, அவர்களுக்கு கருத்தரிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.