சாலையில் சென்ற பாம்பு.. கையில் பிடித்து கடித்து குதறிய இளைஞர்….!!

கர்நாடக மாநிலம், கோலாரில் ஒருவர் குடி போதையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் பாம்பு ஒன்று குறுக்கே சென்றுள்ளது.

அதைக் கண்ட அவர் கோபமாகி, இறங்கி அந்தப் பாம்பைப் பிடித்து, எப்படி என் வழியில் குறுக்கே வருவியா? என்று கூறிக் கொண்டு அதனை எடுத்து தனது பற்களால் கடித்துக் குதறியுள்ளார்.

அதனை அருகிலிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாக மாறியுள்ளது.

இந்தக் காட்சியைக் கண்டவர்கள் கூச்சலிட்டுக் கத்தியுள்ளனர். மேலும் அந்த நபர் பாம்பைப் பிடித்து, அதைத் துண்டு துண்டுகளாகப் பற்களால் கடித்ததை கண்டித்துள்ளனர். ஆனால் அவர் அதனைப் பொருட்படுத்தவில்லை. இதனையடுத்து அந்த நபர் மீது விசாரணையின் நடைப்பெற்று வருகிறது.