நடிகை நிவேதாவை அசிங்கப்படுத்தும் ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். மதுரை பெண்ணாக நடிகையாக அறிமுகமாகி ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் புகழ் பெற்றார்.

இதன்பின் டிக்டிக்டிக் என்ற படத்தில் படுகவர்ச்சியில் நடிக்க ஆரம்பித்து பல படங்களில் நடித்து வருகிறார். சமுகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிவேதா டிவிட்டர் அக்கவுண்ட்டை 2018ல் உபயோகம் செய்து சில மாதங்களிலேயே இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு திரும்பினார்.

இந்நிலையில் டிவிட்டருக்கு வராமல் இருந்த நிவேதா கொரானா லாக்டவுனால் ரசிகர்களிடம் பேச திரும்பவும் வந்தார். வந்தவுடன் அவரது பெயரில் தவறாக உபயோகிக்கும் பல டிவிட்டர் கணக்குகளை பார்த்துள்ளார்.

இதுதான் எனது டிவிட்டர் கணக்கு என்று கூறி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். நடிகையின் பெயரில் இப்படியான தவறான கணக்குகள் சமுகவலைத்தளத்தில் சகஜம்தான் என்று கூறி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.