தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை குஷ்பூ. 90 காலகட்டங்களில் இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர்.
பின்னர் நடிகர் இயக்குனரான சுந்தர் சி அவர்களை திருமணம் செய்துகொண்டு குடும்பம், அரசியல் என செட்டிலாகிவிட்டார் குஷ்பு. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினியின் அண்ணாத்த படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
இந்நிலையில், நடிகை குஷ்பூவின் மகள் உடல் எடையை குறைத்து அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், சமீபத்தில் நடிகை குஷ்பூவின் அம்மா தனது 76 வது பிறந்தநாளை கொண்ட்டாட்டியுள்ளார்.
குஷ்பு தன்வீட்டில் நள்ளிரவு 12 மணிக்கு தன் மகள்களுடன் சேர்ந்து தன் அம்மாவுக்கு கேக் கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.