கொரோனா உலகம் முழுக்க தீவிரம் காட்டி வருகிறது. இந்த வைரஸ் 37.27 லட்சம் மக்களை பாதிப்படைய வைத்துள்ளது. இதனால் உயிரிழந்தவர்கள் 2.58 லட்சம் பேர்.
அமெரிக்காவில் நோய் தொற்றால் பீடிக்கப்பட்டவர்கள் 12.37 லட்சம் பேர் ஆவர். மேலும் 72 ஆயிரம் பேர் இதனால் இறந்துள்ளனர்.
இந்நோயால் பாதிக்கப்பட்டு ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த பலர் பலியாகினர். சில பேர் தீவிர போராட்டத்திற்கு பின் உயிர் பிழைத்தனர்.
இந்நிலையில் புகழ் பெற்ற கீபோர்டு இசைக்கலைஞர் Dave Greenfield கடந்த ஏப்ரல் 26 ல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தொடர்ட் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 71.
இதனால் திரையுலகமும் அவரின் ரசிகர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.