கொரோனா நோயாளிகளக்கு சிகிச்சை அளிக்கப்படும் வார்டில், பிளாஸ்டிக் கவர்களில் பொதியப்பட்ட உடல்கள் கட்டில்களில் படுக்க வைக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.
மும்பையை சேர்ந்த சியோன் மருத்துவமனையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. அதில், ஏழு உடல்கள், கறுப்பு நில பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு படுக்கையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை அம்மாநில எதிர்கட்சி எம்.எல்.ஏ சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
சியோன் மருத்துவமனை டீன் PTIக்கு அளித்த பேட்டியில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்கள் கொண்டு செல்ல அச்சப்படுவதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அம்மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் Dr Ingale கூறுகையில், உடல்கள் வைக்கும் அறையில் 15 இடங்களே உள்ளது. அதில், 11 இடங்கள் ஏற்கனவே நிரம்பி விட்டது. கொரோனாவல் இறந்தவர்கள் உடல்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டால் மற்ற உடல்கள் எடுப்பதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
In Sion hospital..patients r sleeping next to dead bodies!!!
This is the extreme..what kind of administration is this!
Very very shameful!! @mybmc pic.twitter.com/NZmuiUMfSW— nitesh rane (@NiteshNRane) May 6, 2020
உடல்கள் எடுக்க குடும்பத்தினரின் அனுமதிக்காக காத்திருக்கும் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட இடம் மகாராஷ்ரா தான். மொத்தம் 16,800 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் மும்பையில் மட்டும் 10,714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் அம்மாநிலத்தில் 400பேர் பலியாகியுள்ளனர். கொரோனா நோயாளிகளக்கு சிகிச்சை அளிக்கப்படும் வார்டில், பிளாஸ்டிக் கவர்களில் பொதியப்பட்ட உடல்கள் கட்டில்களில் படுக்க வைக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.







