மாத்தளை மாவட்டத்தில் மேலும் இரண்டு கொரோனா வைரஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாத்தளை, யட்டவத்த செலகம பிரதேசத்தைச் சேர்ந்த கடற்படை சிப்பாய் ஒருவரது தாய் மற்றும் தந்தைக்கே இவ்வாறு வைரஸ் பரவியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதனையடுத்து இனம் காணப்பட்ட குறித்த இருவரும் இரனவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.