கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட மொபைல் சாதனங்களுக்கான இயங்குதளமாக அன்ரோயிட் காணப்படுகின்றது.
முற்றிலும் இலவசமாக கிடைக்கும் இந்த இயங்குதளமானது பயனர்கள் இலகுவாகப் பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்கின்றது.
இவ் இயங்குதளத்தில் புதிய அம்சங்களை உட்புகுத்திய புதிய பதிப்புக்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டுவருகின்றது.
இந்நிலையில் அன்ரோயிட் 11 எனும் மற்றுமொரு புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதன்படி இப் பதிப்பானது எதிர்வரும் ஜுன் மாதம் 3 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 2020 ஆம் ஆண்டிற்கான I/O மாநாட்டினை கூகுள் நிறுத்தியுள்ளது.
எனவே யூடியூப் ஊடான நேரடி ஒளிபரப்பு மூலம் இப் புதிய இயங்குதளத்தினை அறிமுகம் செய்யும் நிகழ்வினை கண்டுமகிழ முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.