அறிமுகமாகியது Huawei Y8s ஸ்மார்ட் கைப்பேசி

சீன தொழில்நுட்ப நிறுவனமான Huawei ஆனது Y8s எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.

இக் கைப்பேசியானது 6.5 அங்குல அளவு, 2340 x 1080 Pixel Resolution உடைய Full HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Kirin 710 mobile processor , பிரதான நினைவகமாக 4GB RAM, 64GB அல்லது 128GB சேமிப்பு நினைவகத்தினையும் உள்ளடக்கியுள்ளது.

இதன் சேமிப்பு நினைவகமானது microSD கார்ட்டின் உதவியுடன் அதிகரிக்கக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு செல்ஃபி கமெராக்களை கொண்டுள்ளது.

ஒவ்வொன்றும் 8 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல்களை உடையதாக இருக்கின்றது.

இவை தவிர 48 மெகாபிக்சல்களையும், 2 மெகாபிக்சல்களையும் கொண்ட இரு பிரதான கமெராக்களும் தரப்பட்டுள்ளன.

இவற்றுடன் விரைவாக சார்ஜ் ஆகக்கூடிய 10W சார்ஜிங் தொழில்நுட்பம், 4000 mAh மின்கலம் ஆகியனவும் காணப்படுகின்றது.