உலக அளவில் அதிகளவானவர்கள் பயன்படுத்தும் இணைய உலாவியின் வரிசையில் மூன்றாவது இடத்தில் ஃபயர்பொக்ஸ் காணப்படுகின்றது.
பல மில்லியன் பயனர்களால் பயன்படுத்தப்படும் இந்த உலாவியின் புதிய பதிப்பினை மொஸில்லா நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது.
76.0 எனும் இப் புதிய பதிப்பில் கடவுச் சொற்களை முகாமை செய்யக்கூடிய வசதியானது மேம்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் தகவல்களை பயனர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் மூன்றாம் தரப்பு நிறுவனங்களை கண்காணிக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.
இது தவிர ட்ராக் செய்பவர்களை தடை செய்யக்கூடிய வசதியும் இதில் தரப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இப் புதிய பதிப்பினை மொஸில்லா இணையத்தளத்திலிருந்து நேரடியாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.